நெற்றிக்கண்

நெற்றிக்கண்

Wednesday, June 15, 2011

குதிரையில் சவாரி செய்தபோது விழுந்து நித்தியானந்தா படுகாயம்

பெங்களூர்: செக்ஸ் வழக்கில் சிக்கிய நித்தியானந்தா காலையில் குதிரையில் ஏறி உடற்பயிற்சி செய்தபோது தவறி விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது.

நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் நித்தியானந்தா இடம் பெற்ற காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து அவர் சர்ச்சையில் சிக்கி தலைமறைவார். ஒரு மாத தேடலுக்குப் பின்னர் அவரை இமாச்சலப் பிரதேசத்தில் வைத்து போலீஸார் பிடித்துக் கொண்டு வந்தனர்.

கைது செய்யப்பட்ட நித்தியானந்தா சிறையிலும் அடைக்கப்பட்டார். அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். பெங்களூர் அருகே பிடதியில் உள்ள தனது ஆசிரமத்தில் தங்கியுள்ளார். அவருடன் தற்போது ரஞ்சிதாவும் ஆசிரம சேவையில் கலந்து கொண்டுள்ளார்.
http://www.bollywood91.com/wp-content/uploads/2011/01/Ranjitha-Nithyananda-Video.jpg

இந்த நிலையில் உடற் பயிற்சி செய்வதற்காக குதிரை சவாரி செய்துள்ளார் நித்தியானந்தா. காலையிலேயே அவர் குதிரை சவாரி செய்து உடற்பயிற்சி செய்வாராம். அதுபோல செய்தபோது குதிரை திடீரென முரட்டுத்தனமாக நடந்து மிரண்டு நித்தியானந்தாவை கீழே தள்ளி விட்டு விட்டது. இதில் கீழே விழுந்து நித்தியானந்தாவுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டதாம்.

இதையடுத்து தற்போது அவரை பெங்களூர் மணிபால் மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.

குதிரைக்கு பெயர் ரஞ்சிதா-ன் வச்சிருக்கலாம் அமைதியா இருந்திருக்கும்.

No comments:

Post a Comment